எந்த அரசு அமைந்தாலும், சர்வகட்சி நிர்வாகம் ஏற்பட்டாலும் கூட, இலங்கை தற்போதுள்ள நிலையிலிருந்து மீள்வதற்கு பல வருடங்கள் தேவைப்படும் என்கிறார் எரான் விக்ரமரத்ன.
தற்போதுள்ள நிலையில் பொதுத் தேர்தலை நடாத்தி, புதிய அரசமைத்தாலும் கூட மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமோ வழமைக்குத் திரும்புதலோ ஒரிரவில் இடம்பெறப் போவதில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
சமகி ஜனபல வேகய, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான அரசியல் அழுத்தத்தினை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment