கொழும்பில் இராணுவம் குவிப்பு; உலங்கு வானூர்தி வலம் - sonakar.com

Post Top Ad

Wednesday 13 July 2022

கொழும்பில் இராணுவம் குவிப்பு; உலங்கு வானூர்தி வலம்

 



ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரம் கை மாறியுள்ள நிலையில், பிளவர் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதன் பின்னணியில் அங்கு பொலிசார் தண்ணீர்ப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகை கொண்டு மக்கள் கூடலை கலைத்துள்ளனர்.


இந்நிலையில், கொழும்பின் முக்கிய இடங்களில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் கோட்டா கோ கம பகுதியைச் சுற்றி விமானப்படையின் உலங்கு வானூர்தி தாழ்வான முறையில் பறந்து சுற்றுவதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.


அரசியல் யாப்பின் பிரகாரம், அடுத்த  அரசை உருவாக வழி விட்டு தான் ஒதுங்கிவிடப் போவதாக ரணில் முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவரது வீட்டையும் எரித்து கலகக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்த நிலையில் பதில் ஜனாதிபதியாக இயங்கும் அதிகாரம் கொண்டுள்ள ரணில், அவசர கால சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment