பிரதமர் பதவியை விட்டு விலகத் தயார் என தெரிவித்திருந்த ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரியூட்டப்பட்டுள்ளது.
முன்னதாக அங்கு சென்ற போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தான் பதவி விலகத் தயார் என ரணில் அறிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ச தலைமறைவாகியுள்ள நிலையில், ரணில் இன்று அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்திருந்தார். எனினும், சபாநாயகர் தலைமையிலேயே சந்திப்பு இடம்பெற்றதோடு கோட்டாபயவை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தமையும் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த போதும் எதுவித வன்முறைகளும் இடம்பெறவில்லையாயினும் ரணிலின் தனியார் வீடு எரியூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment