வெடிகுண்டு 'அச்சுறுத்தல்'; அநுர குமார கேள்வி! - sonakar.com

Post Top Ad

Monday 4 July 2022

வெடிகுண்டு 'அச்சுறுத்தல்'; அநுர குமார கேள்வி!

 



நாளை 5ம் திகதி அல்லது 6ம் திகதி முதல் வடக்கு அல்லது தெற்கில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


பாதுகாப்பு செயலாளரர் கமல் குணரத்னவால் வெளியிடப்பட்டுள்ள தகவலில், வெளிநாட்டு புலனாய்வுத் தகவல் ஆதாரம் காட்டப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அநுர வலியுறுத்தியுள்ளார்.


2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டதாக ராஜபக்ச குடும்பம் தெரிவித்த போதிலும், கரும்புலிகள் நினைவாக இக்குண்டு வெடிப்பு நிகழவுள்ளதாக தற்போது தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment