குருநாகல், யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பொது மகன் ஒருவரை இராணுவ உயரதிகாரியொருவர் உதைத்து அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது இலங்கை இராணுவம்.
தெற்கில் இவ்வாறு இடம்பெறுகிறது என்றால் வட-கிழக்கில் இராணுவத்தினர் எவ்வாறு நடந்து கொண்டிருப்பர் என்பதை ஊகிக்கக் கூடியதாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பெரும்பான்மை மக்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment