எரிபொருள் தட்டுப்பாட்டினால் பொலிசாரின் கடமைகள் பாதிப்படைந்து வருவதன் பின்னணியில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 4000 துவிச்சக்கர வண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாடு அல்லோலகல்லோலப்படுகிறது. இந்நிலையில், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதும், காத்திருக்கும் இடங்களிலும் சச்சரவுகள் உருவாவதுமான புதிய வாழ்க்கை முறை புகுத்தப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், பொலிசாருக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி கடமையைத் தொடர ஆவன செய்யப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment