கனவு கலைந்த தம்மிக பதவி துறக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Thursday 21 July 2022

கனவு கலைந்த தம்மிக பதவி துறக்க முஸ்தீபு

 நாட்டின் சூழ்நிலை மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதியாகி விடும் கனவில் அரசியலுக்குள் நுழைந்த தொழிலதிபர் தம்மிக பெரேரா, தமக்குக் கிடைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரணிலுக்கு நாட்டை நிர்வகிக்கத் தெரியாது என்றும் பகிரங்கமாக தெரிவித்த அவர், கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த நிலையில் பிரதமர் பதவியையாவது எதிர்பார்த்திருந்தார்.


எனினும், இலங்கை மக்களின் அரசியல் புரிந்துணர்வை புரட்டிப் போடும் வகையில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வந்து இன்று நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment