13ம் திகதி வரை அவகாசம் கேட்கும் கோட்டா! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 July 2022

13ம் திகதி வரை அவகாசம் கேட்கும் கோட்டா!

 



கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என ஒட்டுமொத்த நாடும் வலியுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.


அவர் பதவி விலக வேண்டும் என்ற கட்சித் தலைவர்கள் தீர்மானமும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 13ம் திகதி தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக கோட்டாபய சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்றைய தினம் சந்தேகத்துக்கிடமான முறையில் துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் பொதிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் விமான நிலையத்திற்கும் வாகனங்கள் அதிக வேகத்தில் பயணித்தமை பல்வேறு ஊகங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், கோட்டா தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment