ராஜபக்ச குடும்ப அதிகாரம் மேலோங்கியிருந்த நிலையில், ஆர்ப்பாட்டமாக உருவாக்கப்பட்ட ஒரே நாடு - ஒரே சட்டம் குழு தமது இறுதி அறிக்கையை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு, போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் காணாமல் போயிருந்த குறித்த குழுவினர் இம்மாதம் 17ம் திகதியளவில் தமது அறிக்கையைத் தயார் செய்து, அதனை மீள் பரிசோதனை செய்வதில் ஈடுபட்டு வந்ததாகவும் இன்று அறிக்கையை கையளிப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை பௌத்த மக்களுக்கே சொந்தம், எனைய அனைவரும் வந்தேறிகள் என்ற கோசத்தினூடாக இனவாத பயங்கரவாதத்தை உருவாக்கிய ஞானசாரவே இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment