அதிகாலையிலேயே பறந்து சென்ற பசிலின் மனைவி - sonakar.com

Post Top Ad

Thursday 9 June 2022

அதிகாலையிலேயே பறந்து சென்ற பசிலின் மனைவி

 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த செய்தி வெளியானதையடுத்து அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்த பசில் ராஜபக்சவின் மனைவி, இன்று மீண்டும் தனது கணவர் இராஜினாமா செய்வதற்கு முன்பாக, அதிகாலையிலேயே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மஹிந்த ஆட்சிக்காலத்தில் சௌகரியமான மதிப்பை சம்பாதித்திருந்த ராஜபக்ச குடும்பத்தினர் தம்மை பல்வேறு வழிகளில் நிறுவ முனைந்திருந்தனர். எனினும், முறையான திட்டமிடல் இன்றி கடனை நம்பி ஆரம்பிக்கப்பட்ட ஆட்சி தற்போது முடிவை நெருங்கி வருகிறது.


எனினும், தனது பதவிக்காலத்தை முடிக்கும் வரை விலகப் போவதில்லையென ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment