பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ள நிலையில், நாட்டில் உணவுப் பஞ்சம் குறித்த அபாயம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருவதுடன் உலக நாடுகளிடம் உதவியும் கோரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமது சக்தியையும் மீறி இலங்கைக்கு உருளைக் கிழங்கு அனுப்பி வைப்பதற்கு பங்களதேஷ் பிரதமர் அரசுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலவே, தமிழ்நாட்டிலிருந்து மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக உதவிகளும் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார சிக்கலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் குடும்ப சகிதம் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த நிகழ்வுகளும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment