நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு அடிப்படைக் காரணம், ராஜபக்சக்களின் பத்து வருடங்களுக்கு மேற்பட்ட ஊழல்களே என மக்கள் திடமாக நம்புகின்ற போதிலும் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்ற சந்தேகம் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மிகவும் சிரமப்பட்டு, பல்வேறு அரச திணைக்களங்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊடாக தாம் இதுவரை பெற்றுக் கொண்ட பெருமளவு தகவல்களின் ஒரு தொகுதியை வெளியிட்டுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
இதை விட அதிகமான அளவு தகவல் கோவைகள் இருப்பதாக தெரிவிக்கும் அவர், அரச திணைக்களங்களில் இவ்வாறு பெருந்தொகையான விடயங்கள் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
அநுர குமாரவின் முழுமையான தகவல்களடங்கிய காணொளி:
No comments:
Post a Comment