விமல் மனைவி பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 May 2022

விமல் மனைவி பிணையில் விடுதலை

 


சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்று உபயோகித்து வந்த குற்றச்சாட்டையுடைய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


இரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து மேற்கொள்ளப்பட்டிருந்த மேன் முறையீட்டின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.


போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறித்த கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டதாக சசி வீரவன்ச மீது 'நல்லாட்சி' அரசில் வழக்கில் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment