நிதியமைச்சு 'போதும்' : அலி சப்ரிக்கு அழுத்தம் - sonakar.com

Post Top Ad

Sunday, 15 May 2022

நிதியமைச்சு 'போதும்' : அலி சப்ரிக்கு அழுத்தம்

 தனக்குக் கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் ஆசனம் ஊடாக அரசுக்கான ஆதரவைத் தொடரவுள்ள போதிலும் நிதியமைச்சினை மீண்டும் பொறுப்பேற்க அலி சப்ரி தயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏலவே, சமூகத்துக்கு எதிர் நிலையில் நின்று ராஜபக்ச குடும்பத்தை நியாயப்படுத்த அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் குடும்ப அழுத்தம் காரணமாக இனியும் இவ்வாறு பதவிகளைப் பொறுப்பெடுக்க விரும்பவில்லையென சப்ரி தெரிவித்துள்ளார்.


ரணிலோடு இணைந்து பணியாற்றுவதாயினும் கூட, கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்ற நிலையில் பெரமுனவினரைக் கொண்டே ரணில் நிர்வாகமும் அமைய வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment