ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் தொலைத் தொடர்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 May 2022

ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் தொலைத் தொடர்பு

 26 அமைச்சுக்கள், அதன் கீழ் வரும் நிறுவனங்கள் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைத் தொடர்பு அமைச்சின் செயற்பாடுகள் ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


புதிய அமைச்சரவையூடாக நாட்டில் நிலவும் 'அதிருப்தி' சூழ்நிலையை மாற்றுவதற்கு ஜனாதிபதி கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை நாடு பாரிய பொருளதார சிக்கலில் தவித்து வருகிறது.


எனினும், ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டு ராஜதந்திர தொடர்புகள் ஊடாக மேலை நாடுகளின் ஆதரவை உறுதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment