கோட்டா 'தெளிவாக' சொன்னால் தயார்: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Tuesday 24 May 2022

கோட்டா 'தெளிவாக' சொன்னால் தயார்: ஹர்ஷ

 மக்கள் போராட்டத்தின் வலுவுணர்ந்து, நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கான 'கால - நிர்ணயத்தை' கோட்டாபய ராஜபக்ச தெளிவு படுத்தினால் நிதியமைச்சை பொறுப்பேற்கத் தயார் என்கிறார் ஹர்ஷ டி சில்வா.


ஓரிரவில் இதைச் செய்ய முடியாது என்பது தமக்கு நன்கு தெரியுமெனவும் தெரிவிக்கின்ற அவர், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவும், நிதியமைச்சைப் பொறுப்பேற்கவும் தயார் எனவும் ஆனாலும் தமது கட்சி சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு கோட்டாபய தெளிவான பதிலைத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை, தான் நிதியமைச்சைப் பொறுப்பேற்ற கணத்தில் அனைத்தும் மாறி விடப் போவதுமில்லையெனவும் தெரிவிக்கின்ற ஹர்ஷ, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்த தேசிய அரசு இயங்குவதே தீர்வெனவும் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment