அமைச்சுப் பதவிகள் கிடைக்காத நிலையில் அங்கலாய்த்து வரும் தமது கட்சிக் காரர்களை ஆசுவாசப்படுத்த 40 ராஜாங்க அமைச்சுக்களை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றில் ஆதரவிழந்தால், தமது பதவியைத் தொடர்ந்தும் தக்க வைக்க முடியாத சூழ்நிலைக் கைதியாகியுள்ள ஜனாதிபதி, மக்கள் கோரிக்கைக்கிணங்க பதவி விலகவும் மறுத்து வருகிறார்.
இந்நிலையிலேயே ராஜாங்க அமைச்சுக்களை அள்ளி வழங்கி கட்சிக்காரர்களை சமாதானப்படுத்த ஜனாதிபதி எண்ணியுள்ள அதேவேளை, மக்கள் போராட்டத்துக்கு அப்பால், அமைச்சுப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் பலத்த போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment