பிரச்சினைகளுக்கு அலி சப்ரி முக்கிய காரணம்: சஜித் - sonakar.com

Post Top Ad

Wednesday 4 May 2022

பிரச்சினைகளுக்கு அலி சப்ரி முக்கிய காரணம்: சஜித்அரசாங்கம் தற்போது எதிர் நோக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபட எடுத்து வரும் முயற்சிகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய இதுவரை போதிய ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளதாக நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.


சர்வதேச நாணய நிதியத்தை அணுகும் போது நாட்டின் நிலை ஸ்தீரமாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி ஒத்துழைக்க வேண்டும் எனவும் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடாத்தி, போதிய ஒத்துழைப்பைப் பெற்று விட்டு தற்போது எதிர்க்கட்சி பதவிகளை அபகரிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதில்லையென சஜித் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அலி சப்ரி கொண்டு வந்த 20ம் திருத்தச் சட்டத்தினாலேயே சர்வாதிகாரம் நிலை பெற்று இன்று ஒரு இடத்தில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு நாடு இந்நிலையை அடைந்திருப்பதாகவும்,  உணவுப் பஞ்சம் பாரிய தாக்கங்களை உருவாக்க முன்பதாக அரசு உடனடியாக சர்வதேச அமைப்புகளைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற முயல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்கு முதலில் நாடு 'ஊழலிலிருந்து' வெளியாக வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment