ஜோன்ஸ்டனுக்கு எதிராக மீண்டும் கிளம்பியுள்ள ல.ஊ.ஆ - sonakar.com

Post Top Ad

Monday 30 May 2022

ஜோன்ஸ்டனுக்கு எதிராக மீண்டும் கிளம்பியுள்ள ல.ஊ.ஆ

 


பெரமுன அரசியல் சண்டியன் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு எதிராக மீண்டும் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது லஞ்ச ஊழல் ஆணைக்குழு.


தனது அமைச்சின் பொறுப்பின் கீழிருந்த நிறுவனத்தை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டனுக்கு எதிராக 'புதிதாக' குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


இதே வழக்கை முன்னர் வாபஸ் பெற்றிருந்த ஆணைக்குழு, இந்தத் தடவை சரியான வகையில் 'முறைமைகள்' பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றமையும் அரசாங்கம் மாறும் போது நடைமுறைகள் மாறும் வழமை தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment