அவசர கால சட்டம் ரத்து - sonakar.com

Post Top Ad

Saturday 21 May 2022

அவசர கால சட்டம் ரத்து

 மக்கள் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் மே 6ம் திகதி ஜனாதிபதியினால் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருந்த அவசர கால சட்டம்,. 20ம் திகதி நள்ளிரவோடு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அவசரகால சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் காலி முகத்திடலில் நிராயுதபாணிகளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.


இந்நிலையில், நாடளாவிய ரீதியில் வன்முறை வெடித்து ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவ்வேளையில் நீதியமைச்சராகக் கடமையாற்றியிருந்த அலி சப்ரி, வன்முறைகளால் தீர்வில்லையெனவும் சொத்துக்களை சேதப்படுத்துவதால் எதையும் சாதிக்க முடியாது எனவும் 'நேற்று' தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment