நிராயுதபாணிகளான அமைதி வழிப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதிலிருந்து தனது பதவியிலிருந்தும் விலகி, தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
வன்முறைகளின் பின் இதுவே அவர் வெளியே வந்துள்ள முதற்தடவையென்பதோடு நிலைமை சீராகிய பின்னரே அவர் விரும்பும் இடத்துக்கு அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப் போவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மே 9 வன்முறையை முன்நின்று நடாத்திய சந்தேகத்தின் பின்னணியில் மஹிந்தவின் தீவிர சகாக்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment