கோட்டா கோ கமவுக்கு 'தபால்' சேவை - sonakar.com

Post Top Ad

Thursday 19 May 2022

கோட்டா கோ கமவுக்கு 'தபால்' சேவை

 காலிமுகத்திடலில், அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளியிடுவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட கோட்டா கோ கம பிரதேசத்துக்கு தபால் திணைக்களம் கடித விநியோகம் செய்துள்ளது.


போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின், சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்று அங்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் அதில் கோட்டா கோ கம என முகவரியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மே 9 தாக்குதலையடுத்து மீண்டும் உத்வேகத்துடன் கோட்டா கோ கம நிர்மாணிக்கப்பட்டு மக்கள் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment