இம்மாதம் 9ம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம பகுதிகளில் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதி டான் பிரியசாத் மற்றும் பெரமுனவின் மேலுமொரு அரசியல் சண்டியரான மொரட்டுவ சமல் லால் ஆகியோரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஏலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 2012ம் ஆண்டு முதல் இடம்பெற்ற பெரும்பாலான இனவாத வன்முறைகளின் பின்னணியிலும் 'இதே' நபர்களின் தொடர்பு அம்பலப்பட்டிருந்த போதிலும் கடந்த காலங்களில் குறித்த நபர்கள் சுதந்திரமாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment