ஜனாதிபதியின் அதிகாரத்தை வெகுவாகக் குறைப்பதற்கமைவான 21ம் திருத்தச் சட்டத்தினை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
ஆகக்கூடியது 20 பேரைக் கொண்ட அமைச்சரவையை நியமித்து, அதனூடாக 21ம் திருத்தச் சட்டத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தற்போதைய சூழ்நிலையில், பிரதமரின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி 'பூரண' ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற அதேவேளை எதிர்க்கட்சிகளிலிருந்தும் சிலரை அமைச்சுப் பதவிகளுக்கு நியமிப்பதற்கு ரணில் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment