21ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பில் பிரதம நீதியரசருடன் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
20ம் திருத்தச் சட்டம் ஊடாக ராஜபக்ச குடும்பம் உருவாக்கிக் கொண்ட நிறைவேற்று அதிகாரத்தினை நீக்கி, மீண்டும் 19ம் திருத்தச் சட்டத்துக்கிணையான வழிமுறைகள் ஊடாக நாடாளுமன்ற அதிகாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் ரணில் இக்கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த நிகழ்வில் விஜேதாச ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ள அதேவேளை, 19ம் திருத்தச் சட்டம் மீண்டும் வரும் என அண்மையில் மக்கள் பதவி விலகக் கோரும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment