காலிமுகத்திடல் வன்முறை: 159 பேர் இதுவரை கைது - sonakar.com

Post Top Ad

Monday, 16 May 2022

காலிமுகத்திடல் வன்முறை: 159 பேர் இதுவரை கைது

 


காலிமுகத்திடல் மற்றும் அண்டிய பிரதேசங்களில் கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில், இதுவரை 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


தனி நபர்கள், உடமைகள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.


இதேவேளை, வன்முறையை ஆரம்பித்த நபர்களை அடையாளங்காண்பதற்கு பொது மக்களிடம் தகவல் உதவி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment