அழுத்தத்தால் தடுமாறும் மஹிந்த ராஜபக்ச - sonakar.com

Post Top Ad

Saturday, 30 April 2022

அழுத்தத்தால் தடுமாறும் மஹிந்த ராஜபக்ச

 மஹிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாது என பெரமுனவில் அவரது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், புதிய பிரதமருடன் இடைக்கால அரசை நிறுவப் போவதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


இப்பின்னணியில், இரு தரப்பு அழுத்தங்களுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ச தமது நிலைமை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமான தகவல் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


விமல் குழு மீண்டும் மஹிந்த ராஜபக்சவுடன் சமாதானமடைந்துள்ள நிலையில், இரு தரப்பு அழுத்தங்களை சந்தித்து வரும் மஹிந்த, தாம் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதாக தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ள அதேவேளை பெரும் அழுத்தங்களை சந்தித்து வருவதாகவும் அறிக்கையொன்றை வெளியிட ஆயத்தமாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment