ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பழைய பங்காளிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி புதிய அமைச்சரவையை உருவாக்க முயற்சி செய்து வருகின்ற நிலையில் அண்மையில் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்ட சாந்த பண்டாரவை பதவி நீக்கம் செய்யாவிடின் பேச்சில்லையென அறிவித்துள்ளார் விமல் வீரவன்ச.
மக்கள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் ராஜபக்சக்கள் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்ற அவர், தாம் சார்ந்த பதினொரு சுயாதீன கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்க இவ்வாறு நிபந்தனை விதித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு விமல் தரப்பு கடுமையாக உழைத்திருந்த அதேவேளை அதற்கு கை மேல் பலனையும் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment