ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயங் கோரி, கோட்டா கோ கமயில் 24 மணி நேர உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள தம்மிக பிரசாத்துக்கு முன்னாள் கிரிக்கட் வீரர்கள் ஆதரவை நல்கி வருகின்றனர்.
அர்ஜுன ரணதுங்க, சிதத் வெத்தமுனி போன்ற பிரபலங்களைத் தொடர்ந்து சனத் ஜயசூரியவும் களத்துக்குச் சென்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
பல தரப்பட்ட மக்களும் ஒனறிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அமைச்சரவையை மாற்றியமைத்து மக்கள் மனதை மாற்றலாம் என ராஜபக்ச குடடும்பம் தொடர்ந்தும் போராட்டத்தைப் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment