இன்னும் ஒரு 'அமைச்சரவை' நியமனத்துக்கு ஆயத்தம் - sonakar.com

Post Top Ad

Thursday 7 April 2022

இன்னும் ஒரு 'அமைச்சரவை' நியமனத்துக்கு ஆயத்தம்

 


நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு சில தினங்களில் தீர்வை வழங்க முடியும் எனவும் இப்பின்னணியில் புதிய அமைச்சரவையொன்றை நியமித்து ஆட்சியைத் தொடர்வதெனவும் தீர்மானித்துள்ளது ஆளுங்கட்சி.


கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு மக்கள் கோரி வருகின்ற போதிலும், பொருளாதார சிக்கலே மக்கள் அதிருப்திக்கு காரணம் எனவும் அதற்கான தீர்வை வழங்கினால் பிரச்சினை முடிந்து விடும் எனவும் ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.


இப்பின்னணியில் பிரதமர் தலைமையில் ஒன்று கூடிய ஆளுங்கட்சி, புதிய அமைச்சரவையை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக பெரமுன தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது;

No comments:

Post a Comment