பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்கவிருந்த நிகழ்வொன்று அங்கு மக்கள் போராட்டம் வெடித்ததன் பின்னணியில் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஆங்காங்கு மக்கள் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், பல இடங்களில் நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெறுவதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.
எனினும், பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேராட்டங்கள் இடம்பெறுவதில் ஆட்சேபனையில்லையென நீதிமன்றங்கள் மறுத்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment