காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் தாம் பேச்சுவாத்தைக்குத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில், போராட்ட களத்திலிருந்து அவருக்கு உடனடி பதில் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகுவதோடு, 19ம் திருத்தச் சட்டத்தை மீள அமுலுக்குக் கொண்டு வந்து ஆறு மாத கால இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அதனையடுத்து ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை நடாத்த வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்ய அரசு தரப்பில் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment