அமைச்சை விட்டுக் கொடுக்க நாமல் நிபந்தனை - sonakar.com

Post Top Ad

Sunday 27 March 2022

 அமைச்சை விட்டுக் கொடுக்க நாமல் நிபந்தனை

 


அமைச்சர்களின்  எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என சுதந்திரக் கட்சியினர் முன் வைத்துள்ள யோசனைக்கு இணங்கத் தாம் தயார் என தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.


எனினும், அதற்கேற்ப தாம் தமது அமைச்சை விட்டுக் கொடுக்க வேண்டுமானால் சு.க உறுப்பினர்களும் தமது அமைச்சுக்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.


அவ்வாறு சுதந்திரக் கட்சியினர் விட்டுக் கொடுக்கத் தயாரானால் தாமும் தயார் என நாமல் தன் நிலை விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment