கபராலுக்கு ரணிலிடமிருந்து 'குட்டு' - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 March 2022

கபராலுக்கு ரணிலிடமிருந்து 'குட்டு'

 பிரதான கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் சிறியளவு பங்கேற்புடன் அனைத்து கட்சி மாநாடு இடம்பெற்று வரும் நிலையில் மத்திய வங்கி ஆளுனர் கபராலின் பேச்சுக்கு ரணில் விசனம் வெளியிட்டுள்ளார்.


ஆரம்ப உரையின் போது தற்போதைய பொருளாதார சிக்கல்கள் தொடர்பில் விளக்கமளித்த கபரால், இதற்கு முன்னைய அரசே காரணம் எனக் கூறியதன் பின்னணியில் ரணில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.


அனைத்து கட்சி மாநாட்டில் 'அரசியல்' பேசுவதற்காக யாரும் வரவில்லையென தெரிவித்த ரணில், ஒருவரை ஒருவர் பழி சொல்வதற்கான இடம் இது இல்லையென கபராலை கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment