அதிக பணம் கொடுத்தால் லைசன்ஸ் பறிமுதல்! - sonakar.com

Post Top Ad

Monday, 28 March 2022

 அதிக பணம் கொடுத்தால் லைசன்ஸ் பறிமுதல்!

 


பணப்பரிமாற்று மற்றும் நாணயமாற்று சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளை விட அதிகமான பெறுமதி வழங்கினால் குறித்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளது மத்திய வங்கி.


பதியப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் விலையை விட வெளியில் இயங்கும் நிறுவனங்கள் அதிக பணம் தருவதால் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவதுண்டு.


எனினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுக்கக் கூடாது என மத்திய வங்கி கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment