வேறு நாடுகளை விட இலங்கைக்கான அரிசி ஏற்றுமதி செய்வதன் ஊடாக மேலதிகமாக 100 அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்படுவதாக மியன்மார் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு டன் அரிசிக்கும் 100 டொலர் மேலதிகமாக கிடைப்பதுடன் ஏனைய நாடுகள் எதிர்பார்க்கும் தரக் கட்டுப்பாடுகளை இலங்கை அமுல்படுத்துவதில்லையென்பதால் ஏற்றுமதி இலகுவாக இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இவ்வருடமும் அடுத்த வருடமும் மொத்தமாக 150,000 டன் அரிசியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment