உலக வங்கியிடமும் உதவி பெற முயற்சி! - sonakar.com

Post Top Ad

Friday 25 March 2022

உலக வங்கியிடமும் உதவி பெற முயற்சி!

 சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி பெறுவதற்கு அரசு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் அதேவேளை உலக வங்கியிடமும் உதவி பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீனாவுடன் கை கோர்த்து பொருளாதாரத்தைக் கட்டியெடுழுப்பப் போவதாகக் கூறி, மேற்குலக வழிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டு வந்த அரசு, தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியைத் தீர்க்க பல வழிகளில் முயன்று வருகிறது.


பொருளாதார சீர்குலைவுக்கு மத்தியில் தொடர்ந்தும் 'கடன்' பெற்று கடன் அடைப்பதற்கே அரசு முயன்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment