ரணில் பிரதமரானால் 'போலின்' கலாச்சாரத்துக்கு உடனடி தீர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 March 2022

ரணில் பிரதமரானால் 'போலின்' கலாச்சாரத்துக்கு உடனடி தீர்வு

 தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டால் 48 மணி நேரத்துக்குள் நாட்டில் தற்போது நிலவும் 'வரிசையில்' காத்திருக்கும் கலாச்சாரத்துக்கு தீர்வு வரும் என்கிறார் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன.


ராஜபக்ச குடும்பத்தினர் இனவாத அடிப்படையில் அபகரித்துக் கொண்ட ஆட்சியினால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது போயுள்ளதுடன் மக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.


இந்நிலையில், ரணிலை பிரதமராக்க வேண்டும் என்ற பேச்சும் நிலவுகின்றமையும் மஹிந்த ராஜபக்ச, தனது பதவியை விட்டுக் கொடுக்கும் எண்ணம் எதுவுமில்லையென தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment