உண்மையான 'பிரச்சினை' டொலர் தான்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday 1 March 2022

உண்மையான 'பிரச்சினை' டொலர் தான்: கம்மன்பில

 எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியவாசிய பொருட்கள் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு பற்றி தனித்தனியாக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அடிப்படைப் பிரச்சினை டொலர் தட்டுப்பாடு என தெரிவிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.


விடுதலைப் புலிகளின் பயங்கரவாத சூழ்நிலையை விட ஆபத்தான நிலையை நாடு எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தயாரில்லையெனவும் தெரிவிக்கிறார்.


இந்நிலையில், தொடர்ந்தும் வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment