குடும்பத்தில் 'மஹிந்த' மட்டுமே நன்றியுள்ளவர்: தேரர்! - sonakar.com

Post Top Ad

Saturday 12 February 2022

குடும்பத்தில் 'மஹிந்த' மட்டுமே நன்றியுள்ளவர்: தேரர்!

 ராஜபக்ச குடும்பத்தில் மஹிந்த ராஜபக்ச மாத்திரமே நன்றியுணர்வுள்ள மனிதர் எனவும் ஏனையோர் தகுதியறியாதவர்கள் எனவும் விசனம் வெளியிட்டுள்ளார் முருத்தெட்டுவே தேரர்.


மஹிந்தவின் மீளெழுச்சிக்கு அபயராம விகாரையில் இடமளித்த தேரர் தற்போது பல்கலைக்கழக வேந்தராகியுள்ளார். எனினும், ஆட்சியை நிறுவ பாடுபட்ட விமல் வீரவன்ச போன்றோர் பசில் ராஜபக்சவால் அவமதிக்கப்படுவதாகவும் இது நன்றி கெட்ட செயல் எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.


சிலரின் அமைச்சு பதவி பறி போனது கூட தனக்குத் 'தெரியாது' என மஹிந்த ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment