மேலை நாடுகளுடன் 'உறவு' தேவையில்லை: ரஷ்யா - sonakar.com

Post Top Ad

Saturday 26 February 2022

மேலை நாடுகளுடன் 'உறவு' தேவையில்லை: ரஷ்யா

 


உக்ரைன் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் மற்றும் ரஷ்ய முக்கியஸ்தர்களின் சொத்து முடக்கம் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மேலை நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையென விளக்கமளித்துள்ளார் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு சபை பிரதி தலைவருமான திமிர்தி மெத்வதேவ்.


வெளிநாட்டு தூதரங்களை மூடுவதற்கான நேரம் வந்து விட்டதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, புதிய தடைகளின் பின்னணியில் ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்த ரஷ்ய சரக்குக் கப்பல் ஒன்றினை பிரான்ஸ் இன்றைய தினம் முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment