'வரலாற்று' எரிபொருள் விலையுயர்வுக்கு தயாராகுங்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday 17 February 2022

'வரலாற்று' எரிபொருள் விலையுயர்வுக்கு தயாராகுங்கள்!

 


எரிபொருள் விலையை உயர்த்துமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வலியுறுத்தி வரும் நிலையில், இம்முறை விலையுயர்வு இலங்கை வரலாற்றில் அதி கூடிய விலையெனும் வரலாற்றை உருவாக்கப் போகிறது என்கிறார் அமைச்சர் கம்மன்பில.


மத்திய வங்கி ஆளுனர் கபராலிடமிருந்தும் பாரியளவு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வேண்டுகோளும் 'நியாயமானது' என தெரிவிக்கிறார் கம்மன்பில.


இப்பின்னணியில் பெற்றோல் விலை லீற்றருக்கு 192 ரூபாவாகவும் டீசல் விலை 162 ரூபாவாகவும் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment