பொருளாதார பிரச்சினையை 'ஆராயும்' அமைச்சரவை - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 February 2022

பொருளாதார பிரச்சினையை 'ஆராயும்' அமைச்சரவை

 


நேற்றைய தினம் வாராந்த அமைச்சரவை சந்திப்புக்கு மேலதிகமாக இன்றைய தினம் நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் எரிபொருள் பிரச்சினைகளை ஆராய மீண்டும் அமைச்சரவை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


பொது மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக நேரடியாகவே கருத்து வெளியிட ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், மக்கள் அதிருப்தி வெகுவாக வளர்ந்து வருகிறது.


சவுதி - சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கடன் கிடைக்கும் எனவும் அரசு எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், இன்றைய அவசர சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment