மேல் மட்ட தலையீட்டினாலேயே சஹ்ரான் தப்பியது: ஷானி! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 February 2022

மேல் மட்ட தலையீட்டினாலேயே சஹ்ரான் தப்பியது: ஷானி!

 


தேசிய தவ்ஹீத் ஜமாத் என அறியப்பட்ட சஹ்ரானின் தீவிரவாத அமைப்பினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பின்னடைவை சந்தித்ததற்கான காரணம், இராணுவ மற்றும் உளவுத்துறையின் தலையீடுகள் என நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார் முன்னாள் குற்றவியல் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர.


ஷானி, தனது கடமைகளில் தவறியதாகக் கூறி புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரைக் கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும், அதனைத் தவிர்ப்பதற்கான தடையுத்தரவு கோரியும் அவரது சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.


இம்மனுவிலேயே உயர் மட்ட தலையீடுகள் குறித்து ஷானி தரப்பு தெரிவித்துள்ளமையும், தலா 800க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவும் அண்மையில் முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment