இறப்பின் பின் கட்டாய கொரோனா பரிசோதனை நீக்கம் - sonakar.com

Post Top Ad

Wednesday 16 February 2022

இறப்பின் பின் கட்டாய கொரோனா பரிசோதனை நீக்கம்

 இலங்கையில் மரணிப்போரின் உடல்கள் கட்டாய கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வந்த நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை காலம் இந்நடைமுறை அமுலில் இருந்து வந்த நிலையில் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம் சமூகம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வந்தது.


தற்போது, நீதிமன்ற உத்தரவு இருந்தால் மாத்திரமே பரிசோதனை அவசியம் என சுகாதார அமைச்சு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment