வவுனியா பல்கலை: உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம் - sonakar.com

Post Top Ad

Friday 11 February 2022

வவுனியா பல்கலை: உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம்

 


இலங்கையின் 17வது அரச பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவினால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


யாழ் பல்கலையின் பகுதியாக இயங்கி வந்த வவுனியா கம்பஸ், கடந்த வருடம் ஜுன் மாதம் விசேட வர்த்தமானியூடாக தனியான பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன் ஓகஸ்ட் மாதம் முதல் வவுனியா பல்கலைக்கழகமாள அறியப்பட்டிருந்தது.


இந்நிலையில், இன்று அதற்கான உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment