12 லட்சத்துக்கு இலங்கையில் தயாரிக்கப்படும் வாகனம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 February 2022

12 லட்சத்துக்கு இலங்கையில் தயாரிக்கப்படும் வாகனம்

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு சக்கார இலகு ரக வாகனத்தை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாற்றீடாக குறித்த வாகனத்தை பயன்படுத்த முடியும் எனவும் ஏலவே 10,000 கி;மீற்றர்கள் பரீட்சார்த்தம் செய்த பின்னரே விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


200 சிசி மோட்டாரில் இயங்கும் குறித்த வாகனத்தில் நான்கு பயணிகள் மற்றும் சாரதி பயணிக்க முடியும் எனவும் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தயாரிப்பாளர்களான இம்பிரியா நிறுவனத்தினால் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment