SLFPயை 'விமர்சிப்பதை' தவிர்க்க உத்தரவு - sonakar.com

Post Top Ad

Thursday 13 January 2022

SLFPயை 'விமர்சிப்பதை' தவிர்க்க உத்தரவு

 


பெரமுன - சுதந்திரக் கட்சி உறவு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பெரும்பாலும் புதிய கூட்டணியமைத்து ஆட்சியைக்  கைப்பற்றுவதற்கான முயற்சி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏலவே பல தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, அரசை விமர்சிக்கவும் ஆரம்பித்துள்ள நிலையில், சுதந்திரக் கட்சியினர் அரசை விட்டு வெளியேற தீர்மானித்தாலும் இனி வரும் காலங்களில் சு.க உறுப்பினர்களை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு பெரமுன உறுப்பினர்களுக்கு தலைமைத்துவம் உத்தரவிட்டுள்ளது.


ஆட்சியின் பங்காளிகளாக இருக்கின்ற போதிலும் தாம் தொடர்ந்தும் மரியாதைக் குறைவாக நடாத்தப்படுவதாக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் தெரிவித்து வந்த நிலையில், எதிர்வரும் தேர்தலில் இக்கூட்டணி இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. இப்பின்னணியிலேயே சு.க உறுப்பினர்கள் மீதான விமர்சனத்தைத் தவிர்க்க பெரமுனவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment