குறுக்கு வழி வேண்டாம்; மைத்ரி எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Monday, 10 January 2022

குறுக்கு வழி வேண்டாம்; மைத்ரி எச்சரிக்கை!

 அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடாத்தி ஜனாதிபதி பதவியை நீடித்துக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்  முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்கள் கடுந் துயரங்களை எதிர் நோக்கி, நீண்ட வரிசைகளில் நிற்க நேர்ந்துள்ளது. சதொச உணவு விநியோக அதிகாரியாகக் கூட கடமையாற்றியிருக்கிறேன், எப்போதும் இப்படியொரு நெருக்கடியை சந்தித்ததில்லை.


இந்த சரிவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு குறுக்கு வழியில் தமது பதவியை நீடிப்பதற்கான முயற்சிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதிக்காது எனவும் மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment