ருவன் தலைமையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 26 January 2022

ருவன் தலைமையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

 


நாட்டின் பொருளாதார சூழ்நிலை, வாழ்க்கைச் சுமை அதிகரிப்பை மையமாக வைத்து காலி நகரில் நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தலைமையில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் கணிசமான தொகை மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது அதிகமாக பணம் அச்சிடாதே, பசளை, சீமெந்து, எரிவாயு எங்கே? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment